YouVersion Logo
Search Icon

எபிரேயர் 11:24-27

எபிரேயர் 11:24-27 TRV

விசுவாசத்தினாலேயே மோசே, வளர்ந்து பெரியவரானபோது தான் பார்வோனின் மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். விரைவில் கடந்து போகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே மோசே தெரிவு செய்தார். கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது, எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான பெறுமதியுடையது என்றே கருதினார். ஏனெனில், அவர் வரப் போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தார். விசுவாசத்தினாலேயே மோசே, அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார். ஏனெனில், அவர் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவராய் மனவுறுதியுடன் இருந்தார்.