எபேசியர் 1:4-5
எபேசியர் 1:4-5 TRV
நாம் இறைவனுடைய பார்வையிலே பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்க வேண்டும் என்பதற்காக உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நம்மை கிறிஸ்துவுக்குள் தெரிவு செய்தார். இறைவன் தம்முடைய அன்பின் காரணமாக, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவருடைய சொந்த பிள்ளைகளாக தத்தெடுத்துக்கொள்ள நம்மை முன்கூட்டியே நியமித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார்.