அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17-18
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17-18 TRV
ஆகவே அனனியா புறப்பட்டு, அந்த வீட்டைச் சென்றடைந்தான். அவன் சவுலின் மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில், வழியிலே உனக்குக் காட்சியளித்த ஆண்டவர் இயேசு, என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ திரும்பவும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான். உடனேயே சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்போது அவனால் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான்.