அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46-47
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46-47 TRV
ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களுக்குள் அப்பத்தைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்கள் கபடமற்ற உள்ளத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய் சாப்பிட்டார்கள். அவர்கள் இறைவனைத் துதிக்கின்றவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகின்றவர்களை கர்த்தர் அவர்களுடன் சேர்த்ததால், அவர்களது எண்ணிக்கை பெருகிற்று.