எண் 31:28-41
எண் 31:28-41 IRVTAM
மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் யெகோவாக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி, அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள். படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், 6,75,000 ஆடுகளும், 72,000 மாடுகளும், 61,000 கழுதைகளும் மீதியாக இருந்தது. ஆணுடன் உடலுறவுக்கொள்ளாத பெண்களில் 32,000 பேர் இருந்தார்கள். யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் 3,37,500. இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675. மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72. கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61. மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர். யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.



