YouVersion Logo
Search Icon

உபா 30:1-5

உபா 30:1-5 IRVTAM

“நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால், உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார். உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார்.