புலம் 5
5
அத்தியாயம் 5
மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்
1யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்;
எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
2எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை;
எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
4எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்;
எங்களுக்கு விறகு விலைக்கிரயமாக வருகிறது.
5பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது;
நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.
6உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
7எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்;
நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்;
எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை.
9வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால்,
எங்களுடைய உயிரைப் பணயம்வைத்து ஆகாரத்தைத் தேடுகிறோம்.
10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
11சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
12தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்;
முதியோர்கள் மதிக்கப்படவில்லை.
13வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்;
இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள்.
14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும்,
வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது.
15எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது;
எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
17அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது;
அதினால் எங்களுடைய கண்கள் இருண்டுபோயின.
18பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
19யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்;
உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
20தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
21யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;
ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
22எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ?
எங்கள்மேல் கடுங்கோபமாக இருக்கிறீரே!
Currently Selected:
புலம் 5: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.