ஏசா 12
12
அத்தியாயம் 12
துதியின் பாடல்கள்
1அக்காலத்திலே நீ சொல்வது:
“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;
நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2இதோ, தேவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து
மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
4அக்காலத்திலே நீங்கள் சொல்வது:
யெகோவாவை துதியுங்கள்;
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;
அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;
அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.
5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள்,
அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;
இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
6சீயோனில் குடியிருக்கிறவளே,
நீ சத்தமிட்டுக் கெம்பீரி;
இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
Currently Selected:
ஏசா 12: IRVTam
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.