YouVersion Logo
Search Icon

2 இராஜா 20

20
அத்தியாயம் 20
எசேக்கியாவின் வியாதி
1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். 2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி: 3ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான். 4ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: 5நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய். 6உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார். 7பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். 8எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். 9அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். 10அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான். 11அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.
பாபிலோனிலிருந்து வந்த பிரதிநிதிகள்
12அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 13எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. 14அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். 15அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 16அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும். 17இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 18நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். 19அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். 20எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 21எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Currently Selected:

2 இராஜா 20: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in