எனவே உங்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக தவறாமல் மன்றாடி வருகின்றோம். ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவால் நிரப்பப்பட வேண்டும் என்றே உங்களுக்காக இறைவனிடம் கேட்கின்றோம். மேலும், நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். பல நற்செயல்களின் ஊடாக கனி கொடுத்து, இறைவனைப் பற்றிய அறிவில் வளர்ச்சி அடைந்து