1
2 தீமோத்தேயு 1:7
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஏனெனில், இறைவன் நமக்குப் பயப்படுகின்ற சுபாவத்தைக் கொடுக்கவில்லை. வல்லமையும், அன்பும், சுய ஒழுக்கமும் உள்ள சுபாவத்தையே தந்திருக்கிறார்.
Compare
Explore 2 தீமோத்தேயு 1:7
2
2 தீமோத்தேயு 1:9
அவரது சொந்த நோக்கத்தின் பொருட்டும் கிருபையின் பொருட்டும் அவர் நம்மை மீட்டெடுத்து பரிசுத்தமான ஒரு வாழ்வுக்கு அழைத்தாரேயன்றி, ஏதோ நாம் செய்த நல்ல செயல்களின் காரணமாக அல்ல. இந்த கிருபையானது யுகங்கள் உருவாகும் முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டது.
Explore 2 தீமோத்தேயு 1:9
3
2 தீமோத்தேயு 1:6
இக் காரணத்தினாலேயே, உனது மேல் நான் எனது கைகளை வைத்தபோது உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி உனக்கு நினைவூட்டுகிறேன்.
Explore 2 தீமோத்தேயு 1:6
4
2 தீமோத்தேயு 1:8
எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்வதற்கோ, அவருக்காகக் கைதியாக இருக்கும் என்னைக் குறித்தோ வெட்கப்படாதே. இறைவனின் வல்லமையில் சார்ந்திருந்து, நற்செய்திக்காகத் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் பங்குகொள்.
Explore 2 தீமோத்தேயு 1:8
5
2 தீமோத்தேயு 1:12
இதன் காரணமாகவே இப்படியாகத் துன்பங்களை அனுபவித்து வருகின்றேன். ஆனால் அதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனெனில் நான் விசுவாசிக்கின்ற அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்படைத்திருப்பதை, அவர் மீண்டும் வரவிருக்கும் நாள்வரை பாதுகாப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
Explore 2 தீமோத்தேயு 1:12
Home
Bible
Plans
Videos