இறைவன் நீதியுள்ளவர், உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகின்றவர்களுக்கு அவர் துன்பத்தைக் கொடுப்பார். துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். ஆண்டவர் இயேசு, பற்றியெரியும் நெருப்புடன் தமது வல்லமையுள்ள தூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது இது நிகழும்.