1
2 கொரி 12:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். உன் பலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, நான் எனது பலவீனங்களைக் குறித்து அதிக மகிழ்ச்சியுடன் பெருமிதம்கொள்வேன்.
Compare
Explore 2 கொரி 12:9
2
2 கொரி 12:10
அதனால் கிறிஸ்துவுக்காக நான் அனுபவித்த பலவீனங்கள், அவமானங்கள், பாடுகள், துன்புறுத்தல்கள், இடர்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பலமுள்ளவனாய் இருக்கின்றேன்.
Explore 2 கொரி 12:10
3
2 கொரி 12:6-7
அப்படி நான் பெருமையாகப் பேசினாலும் அது மடைமையாய் இருக்காது. ஏனெனில் நான் சொல்வது உண்மை. ஆனால் நான் அப்படி பேசப் போவதில்லை. மற்றவர்கள் என்னில் பார்க்கின்றதற்கும் கேட்கின்றதற்கும் மேலாக என்னைக் குறித்து அவர்கள் பெரிதாக எண்ணி விடாமல் இருக்க நான் அப்படி செய்யப் போவதில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட அதிமேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, நான் அகந்தைகொள்ளாதபடி, எனது உடலில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னை கொடுமைப்படுத்தும் சாத்தானின் தூதுவனாயிருக்கிறது.
Explore 2 கொரி 12:6-7
Home
Bible
Plans
Videos