எனவே ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாகவும், வாக்குவாதம் செய்யாதவர்களாகவும் பரிசுத்த கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலும் மன்றாட வேண்டும் என்பதே என் விருப்பம். அதேபோல பெண்கள் அடக்கமானதும், ஒழுக்கம் மற்றும் தகுதியானதுமான ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்புகிறேன். விதவிதமான சிகை அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலையுயர்ந்த ஆடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்குத் தகுந்தபடி, நற்செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.