1
1 தெசலோனிக்கேயர் 4:17
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அதன்பின்பு நம்மில் அதுவரை உயிரோடிருப்பவர்கள் ஆகாயத்திலே ஆண்டவரைச் சந்திப்பதற்காக, அவர்களுடனே மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக நாம் என்றென்றும் ஆண்டவருடனேயே இருப்போம்.
Compare
Explore 1 தெசலோனிக்கேயர் 4:17
2
1 தெசலோனிக்கேயர் 4:16
ஏனெனில் ஆண்டவர் தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் சத்தமான கட்டளை முழக்கத்துடன், பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, இறைவனுடைய எக்காள பேரிகை அழைப்புடன் வருவார். அப்போது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள்.
Explore 1 தெசலோனிக்கேயர் 4:16
3
1 தெசலோனிக்கேயர் 4:3-4
நீங்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். நீங்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டைத் தவிர்த்து, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாகவும் மதிப்புக்குரியதாகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க அறிந்திருக்க வேண்டும்.
Explore 1 தெசலோனிக்கேயர் 4:3-4
4
1 தெசலோனிக்கேயர் 4:14
இயேசு மரணித்து, உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கின்றோமே. அப்படியே, இயேசுவில் நம்பிக்கை வைத்தவர்களாய் மரணம் அடைந்தவர்களையும் இறைவன் அவருடனேகூட அழைத்து வருவார் என்றும் விசுவாசிக்கின்றோம்.
Explore 1 தெசலோனிக்கேயர் 4:14
5
1 தெசலோனிக்கேயர் 4:11
நாங்கள் உங்களுக்கு சொன்னது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதை உங்கள் குறிக்கோளாகக் கொண்டவர்களாகவும், உங்களுடைய சொந்த காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், உங்கள் கைகளினால் உழைத்து வேலை செய்கின்றவர்களாகவும் இருங்கள்.
Explore 1 தெசலோனிக்கேயர் 4:11
6
1 தெசலோனிக்கேயர் 4:7
ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் வாழ்வதற்கு அல்ல, பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார்.
Explore 1 தெசலோனிக்கேயர் 4:7
Home
Bible
Plans
Videos