1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
Compare
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:4
எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:4
3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:9
இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது. என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது, ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:9
4
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:12
கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர். ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:12
5
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:8
ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:8
6
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:7
நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:7
7
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5
ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5
8
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:2
கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:2
Home
Bible
Plans
Videos