1
1 நாளாகமம் 16:11
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
Compare
Explore 1 நாளாகமம் 16:11
2
1 நாளாகமம் 16:34
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Explore 1 நாளாகமம் 16:34
3
1 நாளாகமம் 16:8
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
Explore 1 நாளாகமம் 16:8
4
1 நாளாகமம் 16:10
அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
Explore 1 நாளாகமம் 16:10
5
1 நாளாகமம் 16:12
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
Explore 1 நாளாகமம் 16:12
6
1 நாளாகமம் 16:9
அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
Explore 1 நாளாகமம் 16:9
7
1 நாளாகமம் 16:25
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
Explore 1 நாளாகமம் 16:25
8
1 நாளாகமம் 16:29
யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள். அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்.
Explore 1 நாளாகமம் 16:29
9
1 நாளாகமம் 16:27
மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன.
Explore 1 நாளாகமம் 16:27
10
1 நாளாகமம் 16:23
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள்.
Explore 1 நாளாகமம் 16:23
11
1 நாளாகமம் 16:24
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
Explore 1 நாளாகமம் 16:24
12
1 நாளாகமம் 16:22
“நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”
Explore 1 நாளாகமம் 16:22
13
1 நாளாகமம் 16:26
நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
Explore 1 நாளாகமம் 16:26
14
1 நாளாகமம் 16:15
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்
Explore 1 நாளாகமம் 16:15
15
1 நாளாகமம் 16:31
வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும்.
Explore 1 நாளாகமம் 16:31
16
1 நாளாகமம் 16:36
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள்.
Explore 1 நாளாகமம் 16:36
17
1 நாளாகமம் 16:28
நாடுகளின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
Explore 1 நாளாகமம் 16:28
Home
Bible
Plans
Videos