የYouVersion አርማ
የፍለጋ አዶ

ஆதி 5

5
அத்தியாயம் 5
ஆதாமின் வம்சவரலாறு
1 நாளா 1:1-4
1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். 2அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். 3ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். 4ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 5ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
6சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். 7சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 8சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். 9ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். 10ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 11ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். 12கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப்#5:12 தேவனுக்கு ஸ்தோத்திரம் பெற்றெடுத்தான். 13கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 14கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். 15மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். 16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 17மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். 18யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். 19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 20யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். 21ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். 22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 23ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். 24ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். 25மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். 26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 27மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். 28லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, 29“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். 30லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 31லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
32நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

Currently Selected:

ஆதி 5: IRVTam

ማድመቅ

Share

Copy

None

ያደመቋቸው ምንባቦች በሁሉም መሣሪያዎችዎ ላይ እንዲቀመጡ ይፈልጋሉ? ይመዝገቡ ወይም ይግቡ